• Login / Register
  • செய்திகள்

    எப்படி நடந்தது தேரோட்ட விபத்து?

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழாவின்போது தேர்மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்துள்ளனர். தேர் தீக்கிரையாகியுள்ளது. பலியானவர்களில் 2 சிறுவர்களும் அடங்குவார்கள். ஒரு தந்தை மகன் ஆகியோரும் பலியாகி உள்ளனர்.

     

    இந்த தேரோட்ட விபத்து எப்படி நடந்தது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

     

    இந்த களிமேடு கிராம அப்பர் கோயில் திருவிழா தேரோட்டம் முறையாக காவல்துறை, தீயணைப்புத்துறை அனுமதி பெறாமல் நடந்திருக்கிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக  தேரோட்டம் நடைபெறாததால் இந்தமுறை பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருக்கிறார்கள்.

     

    தேரில் அளவுக்கு அதிகமாக அலங்கார பொருட்கள் இருந்திருக்கின்றன. தேர் வரும் வழிநெடுக தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்திருக்கிறது.  தேரின் மேல் பகுதி மின்சார கம்பியின் மேல் உரசும் என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

     

    தேருக்கு முன்னால் தள்ளுவண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டு புகை கிளம்பியுள்ளது. இதுவும் விபத்துக்குக் காரணமாகி விட்டது. தேர் இழுப்பவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றப்பட்டதால் தேர் இழுத்த பலர் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். 

    Leave A Comment