யாழ் பல்கலைக்கழக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்து உயிரை மயாத்துக்கொள்ள முயன்ற யாழ் பல்கலைக் கழக ஊழியர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று (31) உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியில் வசித்து வந்த ஆசீர்வாதம் தனஞ்சயன்(ஜிம்புறு) (வயது-42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் பல்கலைக் கழக விஞ்ஞான பீட ஆயுவுகூட உதவியாளராக பணியாற்றி வந்த குடும்பஸ்தரான குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விபரீதமான முடிவெடுத்து உயிரைமாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். இதையடுத்து குடும்பத்தினரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (31) புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Leave A Comment