• Login / Register
  • செய்திகள்

    பெட்ரோல் விலை ரூ. 9.50, டீசல் ரூ. 7 விலை குறைப்பு

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் நிர்மலாபேசினார்.

    ‘பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான விலை 9.50 ரூபாயும், டீசல் மீது 7 ரூபாயும் குறையும்.

    இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9 கோடி பயனாளிகளுக்கு ஆண்டிற்கு 12 சிலிண்டருக்கு தலா ரூபாய் 200 மானியம் அளிக்கப்படும்.


    சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருள்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும்.

    ஒரு சில உருக்கு மூலப் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும்.

    ஒரு சில எஃகு பொருள்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்’

    இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

     

    Leave A Comment