• Login / Register
  • செய்திகள்

    பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் –ஓ.பன்னீர்செல்வம்

    பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்தது.

    பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வாட் வரியைக் குறைக்கும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதன்படி கேரள அரசு, பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.2.41ஐயும், டீசல் மீதான வாட் வரியில் ரூ.1.36 ஐயும் கேரள அரசு குறைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளது.

    இந்தநிலையில் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டுவரி எனப்படும் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் இதுவும் ‘திராவிட மாடல்’ போலும் என்ற எண்ணம் மக்கள் நடுவில் ஏற்பட்டுவிடும்’ என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    இதனிடையே, பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். ‘இரண்டு மாதங்களில் லிட்டருக்கு பத்து ரூபாய் விலை உயர்த்திவிட்டு, இப்போது பெட்ரோல் லிட்டருக்கு 9.50, டீசல் லிட்டருக்கு 7 ரூபாய் விலை குறைப்பது கொள்ளை அடிப்பதற்குச் சமமானது’ என அவர் கூறியிருக்கிறார்.

    Leave A Comment