• Login / Register
  • செய்திகள்

    பங்குச் சந்தை முறைகேடு வழக்கு- 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    பங்குச் சந்தையில் ஊழல், மற்றும் தேசிய பங்குச் சந்தை தொடர்பான ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக, தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி சிபிஜ காவல்துறையினர் சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தனர்.

    இவர் மீது பங்குச் சந்தையில் முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக, சிபிஜ வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன் சித்ரா ராமகிருஷ்ணாவை, சிபிஜ காவல்துறையினர் ஆஜர்படுத்தினார்கள்.

    பின்னர், சித்ரா ராமகிருஷ்ணாவை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா தனக்கு ஜாமீன் வழங்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுதாக்கல் மீதான விசாரணை, நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐ காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற மே 31ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஆனந்த் சுப்ரமணியனும் தற்போது திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் தொடர்புடைய பங்குச் சந்தை இடைத் தரகர்கள், வர்த்தகர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையானது, மும்பை, காந்தி நகர், நொய்டா உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றது.

    Leave A Comment