• Login / Register
  • செய்திகள்

    திமுக அமைச்சரவை மாற்றம்? 4 அமைச்சர்கள் நீக்கம்?

    திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்காகத் தனிக் கண்காணிப்புப்பிரிவை அவர் உருவாக்கி இருக்கிறார்.

    தற்போது ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் திறமையாகச் செயல்பட்ட அமைச்சர்களை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அதேவேளையில் 4 அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது அவருக்கு அதிருப்தி இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இந்தநிலையில் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி அமைச்சர்கள் சிலரது இலாகாக்களை மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    அமைச்சரவை மாற்றத்தின்போது அதிருப்திப் பட்டியலில் உள்ள 4 அமைச்சர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புதிதாக 4 இளைஞர்கள் அமைச்சர்களாக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக்கப்படுவாரா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் அளிக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

    Leave A Comment