• Login / Register
  • செய்திகள்

    கேரளாவில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 27ஆம் தேதி தொடக்கத்தில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகின்றது.

    இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில், கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இதன் காரணமாக, இந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர கேரளத்தின் மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று கேரளா வந்துள்ளனர்.

    தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து தலா 100 பேர் கொண்ட 5 குழுக்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மழை சீற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநில அரசு கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் உதவி தேவைப்படுவோர்கள் 1077 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

    Leave A Comment