• Login / Register
  • செய்திகள்

    மிரட்டல் வருகிறது : பிரதமரை சந்திப்பேன் – மதுரை ஆதீனம்

    மதுரை ஆதீனம் குமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் நடந்த கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் பங்கேற்றார். அங்கே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    ‘தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசத்துக்கு தடைவிதித்த து ஏன்? பட்டணப் பிரவேசத்துக்கு எதிர்ப்பு இருப்பதால்தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டால் நான் உள்பட தமிழ்நாடே பல்லக்கு சுமக்க தயாராக இருக்கிறது.

    பட்டணப் பிரவேச விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.

    இந்தியா முழுவதும் மகாசிவராத்திரிக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் விடுமுறை விடப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. எனவே இதுபற்றி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும்.

    பிரதமரை சந்திக்க கூடிய நேரம் வரும்போது சந்திப்பேன். எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இவர்கள் ஓவராகப் போனால் பிரதமரைச் சந்திக்க வேண்டியதுதான்.

    மடத்துப்பிரச்சினையை மதப் பிரச்சினை ஆக்கியது யார்? அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மிகவாதி பேசக் கூடாதா? ஆன்மிகத்தில் பிரச்சினை என்றால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

    ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோவிலில் அரசாங்கம்தானே இருக்கிறது? அரசியல்வாதிகள்தான் அறநிலையத்துறை அமைச்சராகிறார்கள். நாம் கோயிலில் தலையிடுவதால் அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுதான்.

    இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

    Leave A Comment