• Login / Register
  • செய்திகள்

    பிரபல பஞ்சாப் பாடகர் சுட்டுக் கொலை

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் முதல்வராக கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார்.

    இதன் பின்னர், அமைச்சர்களுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், விஜபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கெனவே பல்வேறு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் நிலவி வருகின்றது.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாபி பாடகருமான சுப்தீப் சிங் மூஸ்வாலா நேற்று மாலை மர்ம நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

    இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூஸ் வாலாவுடன் இருந்த மற்ற இருவரும் காயமடைந்தனர்.

    மான்சா அருகே உள்ள மூஸ் வாலா கிராமத்தைச் சேர்ந்த சித்து மூஸ் வாலா கடந்த சில ஆண்டுகளில் பல சூப்பர்ஹிட் பஞ்சாபி பாடல்களைப் பாடியவர்.

    மூஸ் வாலா காங்கிரஸ் சார்பில் மான்சா தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை ஆம் ஆத்மி கட்சியின் டாக்டர் விஜய் சிங்லா 63,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த ஆண்டு நவம்பரில் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் சித்து மூஸ் வாலா காங்கிரஸில் இணைந்தார். மான்சா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் அவருக்குச் சீட்டு கொடுத்ததால் அப்போதைய மான்சா எம்எல்ஏவான நாசர் சிங் மன்ஷாஹியா, சர்ச்சைக்குரிய பாடகரின் வேட்புமனுவை எதிர்ப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, மூஸ் வாலாவுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொண்ட அடுத்த நாள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

     

    Leave A Comment