• Login / Register
  • செய்திகள்

    இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு: ஒரே ஆண்டில் இரண்டாவது முறை

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

    அரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஊழியர்களும் களமிறங்கியதால், இலங்கையில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, இலங்கையில் உள்ள கல்வி நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியானது.

    இலங்கையில் மாணவர்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் சில மாணவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது.



    போராட்டம் நடத்தியவர்கள் மீது இலங்கை அரசு, காவல்துறையினரை ஏவி தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் இரக்கமின்றி தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


    இந்த நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில், இலங்கையில் ஒரே ஆண்டில் 2ஆவது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நள்ளிரவு முதல் அவசர நிலை அமலுக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் வர்த்தமானி எனப்படும் கெஜட் வெளியாகி உள்ளது

    இதற்கு முன்னதாக இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


     

     

    Leave A Comment