• Login / Register
  • செய்திகள்

    ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனிஷ்

    ஆஸ்திரேலியாவின் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில், ஆளும் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் நேஷனல் கட்சிக்கும், அந்தோணி அல்பனிஷின் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்த நிலையில், இன்று எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஆளும் பிரதமரின் லிபரல் நேஷனல் கட்சியின் கூட்டணி 40 இடங்களைப் பெற்றுள்ளது.

    அந்தோணி அல்பனிஷின் தொழிலாளர் கட்சி கூட்டணி 73 இடங்களை பெற்றுள்ளது. 15 இடங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் இழுபறியிலேயே உள்ளன.

    இந்த நிலையில், ஆட்சியமைக்க 76 இடங்கள் தேவையென்ற நிலையில், அதற்கான இடங்களை பெரும்பாலும் தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது. இதனிடையே, சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவு தொழிலாளர் கட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இதனையடுத்து, தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் அந்தோணி அல்பனிஷ், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் மூலம், அந்தோணி அல்பனிஷ் ஆஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராகிறார். இதன் மூலம், ஆஸ்திரேலிய மக்கள் ஸ்காட் மோரிசனின் 9 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர்.

    தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அந்தோணி அல்பனிஷ் 26 ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment