• Login / Register
  • செய்திகள்

    மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்

    தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர்களது பதவிக்காலம் ஜூன் 29ஆம்தேதியுடன் முடிவடைகிறது.

    இதனால் தமிழகம் சார்பாக 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் ஜூன் 10ஆம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    திமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள நிலையில் அந்தக் கட்சி சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன் ஆகிய 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது.

    மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுகவுக்கு 2  இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள நிலையில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று அதிமுக வேட்பாளர்களை கூட்டாக அறிவித்தனர்.

    அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும், ஆர். தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    19ஆம்தேதி தலைமைக் கழகத்தில் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து வேட்பாளர்களைத் தேர்வு செய்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம்,  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.சண்முகம், முன்னாள் சட்டஅமைச்சர் என்பதுடன் அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆவார். ஆர்.தர்மர், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் முதுகளத்தூர் ஒன்றியச் செயலாளர் ஆவார்.

    Leave A Comment