• Login / Register
  • செய்திகள்

    சிங்களர்கள் கொலைவெறித் தாக்குதல்; உயிர் தப்பிய தமிழ் எம்பி!

    தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து ஆரம்பித்த ஊர்தி பவனி திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வைத்து சிங்களர்களால் வழிமறிக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

    இதன்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை சுற்றிவளைத்து கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    தியாகத் தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) திருகோணமலை நகரை நோக்கி சென்ற போது கப்பல்த்துறை பகுதியில் வைத்து சிங்கள காடையர் குழுவினால் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் வன்முறையில் ஈடுபட்ட சிங்கள காடையர்களை கட்டுப்படுத்தாது செயற்பட்டிருந்தமை வெளியாகியுள்ள காணொளி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மீண்டும் ஒரு இன வன்முறையை தூண்டும் விதமாக சிங்கள காடையர்கள் குழுவின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்தாது சிங்கள பொலிசார் வேடிக்கை பார்த்து நின்றமை இலங்கையில் தமிழர்களின் நிலையை அம்பலமாக்கியுள்ளது.

    மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இந்த நிலை எனில் சாதாரன தமிழ் பொது மக்களுக்கு இலங்கையில் எவ்வாறான பாதுகாப்பு உள்ளது என்பதனை இச்சம்பவம் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

    குறித்த காட்டுமிராண்டித் தனமான வன்முறை சம்வத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவத்து அறிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment