மொராக்கோவில் 10 ஆயிரம் பேர் பலி? 5,530 பேர் காயம்!
மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் காயமடைந்தவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் காணப்படுவதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிகக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 8 ஆம் திகதி இரவு 11:11 மணிக்கு (2211 GMT) வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோவின் முக்கிய நகரமான மரகேஷிலிருந்து தென்மேற்கே 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம், 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
19 நிமிடங்கள் தீவிரதன்மையுடன் இருந்த இந்த நிலநடுக்கம் அதற்குக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சில கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. மொரோக்கோவில் உள்ள பழைய மதீனா பகுதியும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், மொராக்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,901 ஐ எட்டியுள்ளது என்று மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5,530 ஆக உயர்ந்துள்ளது என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை தகவல்களின் அடிப்படையில், வடக்கு மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள டெர்னா நகரில் மட்டும் குறைந்தது 2,300 பேர் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் 2,884 பேர் புதைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு, இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம், குறைந்தது 10,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எவ்வாறாயினும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave A Comment