வடக்கும் பறிபோகும் நிலை; அம்பலமாகும் உண்மை!
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணமும் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையின் வெளிப்பாடாக சிங்கள, முஸ்லிம் மக்களின் சனத்தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தொடர்பான புள்ளிவபரங்கள் வெளியாகியுள்ளன.
இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகமாக இருக்கும் நிலையில் ஆயுதமௌனிப்பின் பின்னராக கிழக்கு மாகாணம் பெரும்பாலும் தமிழர்களிடம் இருந்து பறிபோயுள்ளது. தற்போது வடக்கு மாகாணமும் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயுத மௌனிப்பின் பின்னரான 14 ஆண்டுகளில் வடக்கின் குடிப்பரம்பலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்பட்டுள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் குடித்தொகை இரட்டிப்பாக வடக்கில் அதிகரிதுள்ளமை தெரியவந்துள்ளது.
மாவட்ட செயலகங்களில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக பெறப்பட்ட தகவல் மூலம் இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போர் முடிந்த பின் 2010 ஆம் ஆண்டில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்,
தமிழர்கள் 10 இலட்சத்து 35 ஆயிரத்து 89 பேரும்
முஸ்லிம்கள் 34 ஆயிரத்து 376 பேரும்
சிங்களவர்கள் 17 ஆயிரத்து 830 பேரும் வசித்துள்ளனர்.
ஆனால் 2022 ஆம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்,
தமிழர்கள் 11 இலட்சத்து 16 ஆயிரத்து 260 பேரும்
முஸ்லிம்கள் 89 ஆயிரத்து 620 பேரும்
சிங்களவர்கள் 33 ஆயிரத்து 835 பேருமாக அந்தக் குடிப்பரம்பல் மாற்றமடைந்துள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் 81 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 251 பேரால் அதிகரித்துள்ளது. சிங்களவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 12 ஆண்டுகால இடைவெளியில் முஸ்லிம், சிங்களவர்களது எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்திருப்பது அம்பலமாகியுள்ளது.
வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைத்து அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதாக தமிழர்கள் தரப்பில் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment