• Login / Register
  • செய்திகள்

    திமுக-வுக்கு ஆதரவு - சீமான் அதிரடி அறிவிப்பு!

    2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக-வுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து 13 ஆண்டுகளில் இதுவரை எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அமைக்காது தனித்து எதிர்கொண்டு வருவதுடன் இனி வரும் காலங்களிலும் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் எப்போதும் தேர்தல் கூட்டணி கிடையாது என தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆன்மிக தலமான இராமேஸ்வரத்தை உள்ளடக்கிய இராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என்ற தகவல் வெளியான நிலையில் மோடியை எதிர்த்து தாம் நேரடியாக போட்டியிடுவேன் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டால், மோடியை எதிர்த்து போட்டியிடமாட்டேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

    இராமநாதபுரம் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டால் தாம் போட்டியிடமாட்டேன் என்றார்.

    இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்து பேசிய அவர், "நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்யுமானால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

    மேலும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தேன்.

    தற்போது கூட, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராக மோடி நின்றால், திமுக உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளரை அறிவித்தால் நான் பின்வாங்கி கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், திமுக கூட்டணி சார்பில் மற்றவர்கள் களமிறக்கப்பட்டால் தாம் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

    அதேநேரத்தில், தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் தமக்கு எப்போதும் தேர்தல் உடன்பாடு கிடையாது என்றும் உறுதியாக கூறினார்.

    Leave A Comment