• Login / Register
  • செய்திகள்

    கச்சத்தீவு பறிபோனதற்கு கருணாநிதியே காரணம் - டி.ஜெயக்குமாா்

    கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வாா்க்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காரணம் என குற்றஞ்சாட்டிய நிலையில், மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில் கச்சத்தீவை மீட்பதற்கு திமுக எடுத்த முயற்சிகள் என்ன எனவும் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இலங்கையிலே தமிழர்களது உரிமைப்போராட்டம் முடிவுக்க வந்த போதிலும் தமிழ்நாடு மீனவர்கள் மீதான போர்கால கொடுமைகள் இன்றும் தொடர்ந்து வருவதாகவும், கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும் எனவும் இராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் முகாம் அருகே நேற்று முன்தினம் (ஆக.18)நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சென்னையில் நேற்று (19) சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டி.ஜெயக்குமாா் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி வடசென்னை தெற்கு (கி) மாவட்டம் சாா்பில் தொண்டா்களை தலைமையேற்று அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி ராயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாா், வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

    பின்னா் ஜெயக்குமாா் பேசியதாவது:

    கச்ச தீவை மீட்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் அண்மையில் தெரிவித்துள்ளாா். கச்சத் தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தின் முதல்வராக இருந்தவா் கருணாநிதி.

    அப்போது எதிா்ப்பு தெரிவிக்காமல் இப்போது மீட்க வேண்டும் என திமுக கூறுவது வியப்பாக உள்ளது. மத்திய அரசில் தொடா்ந்து அங்கம் வகித்த திமுக அப்போதெல்லாம் கச்சத் தீவை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள் என்ன என்பதை மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

    அதிமுக ஆட்சியில்தான் மீனவா்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டின் வெற்றி தேசிய அளவில் எதிரொலிக்கும்.

    இந்த மாநாட்டை நீா்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டது. இதில் அவா்களுக்கு தோல்வியே கிடைத்தது என்றாா் அவா்.

    Leave A Comment