• Login / Register
  • செய்திகள்

    மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது; வீராங்கனைகள் அறிவிப்பு


    பிரிஜ் பூஷணுக்கு எதிராக புது தில்லியில் நடைபெற்று வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மல்யுத்த வீரர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்துள்ளனர்.

    டபிள்யுஎஃப்ஐ தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருப்பதால், அதுவரை தங்களது போராட்டம் தற்காலிகமாக  கைவிடப்படுவதாக 
    மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

    மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அனுராக் தாக்குர் உடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புக்குப் பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா செய்தியாளர்களிடம் பேசுகையில், மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரிஜ் பூஷணுக்கு எதிரான விசாரணை நடத்திமுடிக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதால், எங்களது போராட்டம் ஜூன் 15ஆம் தேதி வரை மட்டும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இந்த போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பின்போது, பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் மீது தில்லி காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று உறுதி அளித்திருப்பதாகவும் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
     


    Leave A Comment