• Login / Register
  • செய்திகள்

    "ஜனநாயகத்தை மீட்கவே திமுகவை நாடி வந்துள்ளோம்"; அரவிந்த் கேஜரிவால்

    சென்னை வந்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனநாயகத்தை பாதுகாக்கவே திமுகவை நாடி வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    தில்லி மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிற மாநில முதல்வா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வலியுறுத்தி வருகிறாா்.

    இந்நிலையில், சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனைக்கு பிறகு மூன்று மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது தில்லி முதல்வர் கேஜரிவால் பேசியதாவது:

    மாநிலங்களையின் மொத்த எண்ணிக்கையான 238-இல் பாஜக உறுப்பினர்கள் 93 பேர் மட்டுமே. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மாநிலங்களவையில் இந்த மசோதாவை தோற்கடிக்க முடியும்.

    மாநிலங்களவையில் இந்த சட்டத்தை வென்றால், 2024 தேர்தலுக்கு முன் அரையிறுதியில் வென்றதுபோல் இருக்கும். மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவை நாடியுள்ளோம் என்றார்.


    Leave A Comment