நாடாளுமன்ற திறப்பு; பா.ம.க. பங்கேற்கும் - அன்புமணி
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா தொடர்பில் பல சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
வரும் 28-ஆம் தேதி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கூட்டாக அறிவித்தன. அதே வேளையில் ஏற்கெனவே அறிவித்தபடி பிரதமா்தான் திறந்து வைப்பாா் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
Leave A Comment