• Login / Register
  • செய்திகள்

    திருகோணமலையில் பாடசாலை மாணவரை கடத்த முயற்சி!

    இலங்கை - திருகோணமலையில் பாடசாலை மாணவர் ஒருவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்படும் பல சம்பவங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இவ்வாறான சிறுவர் கடத்தல் சம்பவங்களில் பெரும்பாலானவை போலியானவை என இலங்கை பொலீசார் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறான நிலையில், திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை சிலர் கடத்த முயற்சித்ததாக காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய (24) தினம் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 22 ஆம் திகதி குறித்த மாணவர் மேலதிக வகுப்பிற்காக சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் சிலர் கடத்த முயற்சித்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியிலும் சிறுவர் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment