இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 672,380 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 16,868 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment