லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி; வைரலாகும் புகைப்படங்கள்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு லாரியில் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நேற்று இரவு தில்லியில் இருந்து சிம்லாவுக்கு காரில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, திடீரென்று தில்லி - சத்தீஸ்கர் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி, சாலையோர உணவகங்களில் நின்றிருந்த லாரி ஓட்டுநர்களுடன் உரையாடினார்.

அதன்பிறகு, யாரும் எதிர்பாராத விதமாக கார் பயணத்தை தவிர்த்து முர்தலில் இருந்து அம்பலா வரை லாரியின் முன்பகுதியில் லாரி ஓட்டுநருடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின்போது, லாரி ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடினார்.தொடர்ந்து, அம்பாலாவிலிருந்து கார் மூலம் சிம்லாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன.
Leave A Comment