• Login / Register
  • செய்திகள்

    சவூதியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ்!

    சவூதியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையுடன் மற்றும் தனியார் விண்வெளி வீரர்களையும் ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நேற்றைய தினம்  மதியம் புளோரிடாவில் இருந்து விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. 

    இந்த விண்வெளி குழுவில் சவூதி அரேபியாவின் விஞ்ஞானிகள் அலி அல்கர்னி மற்றும் ரய்யானா பர்னாவி, அமெரிக்காவின் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரரும், நாசா முன்னாள் விண்வெளி வீரருமான பெக்கி விட்சன் மற்றும் முதலீட்டாளரும் விமானியுமான ஜான் ஷோஃப்னர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, விண்வெளி நிலையத்துக்கு செல்லும் சவூதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் ஆவார்.

    "சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து மக்களின் கனவுகள் மற்றும் அனைத்து நம்பிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று பர்னாவி கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 


    Leave A Comment