• Login / Register
  • செய்திகள்

    2000 ரூபா நோட்டுகளுக்கு டாஸ்மாக் தடை; அமைச்சர் மறுப்பு

    டாஸ்மாக்கிற்கு மதுபானம் வாங்க வருபவர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதற்கு டாஸ்மாக் நிறுவனம் தடை விதித்துள்ளதாக வெளியான செய்திகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    நாட்டில் ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி நேற்று அறிவித்தது.

    தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என வதந்திகள் பரவின. இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படாது என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். 



    Leave A Comment