• Login / Register
  • செய்திகள்

    இலங்கை: உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

    இலங்கையில் உணவுப் பொதிகளின் விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரலாறு காணாதவைகயில் உயர்த்தப்பட்டிருந்தன.

    இதன் காரணமாக உணவு வகைகளின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டிருந்தன.

    இந்நிலையில், இன்று (5) நள்ளிரவு முதல், உணவுப்பொதி, கொத்து ரொட்டி, ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இதன்படி, உணவுப்பொதி, கொத்து ரொட்டி, ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை, 20 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் சமையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment