• Login / Register
  • செய்திகள்

    அதிமுக பொதுச் செயலர் தேர்தலை எதிர்த்து மனு: இன்று விசாரணை!

    அதிமுக பொதுச் செயலர் தேர்தல் வரும் 26ம் திகதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள நிலையில் குறித்த தேர்தலுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    அதிமுக பொதுச் செயலர் தோ்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பி.எச். மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) விசாரிக்கிறது.

    உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் தரப்பில், ‘அதிமுக பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமைமுதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இரட்டைத் தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமையை உருவாக்கிக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பொதுச் செயலர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று அவசர முறையீடு செய்யப்பட்டது.

    இந்த அவசர முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா, மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளாா்.

    இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் விசாரிக்கப்படவுள்ளது.

    Leave A Comment