• Login / Register
  • செய்திகள்

    3 நாட்கள் மணல் தீடையில் தவிப்பு - இரண்டரை மாத குழந்தை உள்ளிட்ட எண்மர் மீட்பு

    மூன்றாம் மண்ல் தீடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக தவித்துவந்த இரண்டரை மாத குழந்தை உள்ளிட்ட எண்மர் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை குறித்து 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு வாழமுடியாது புறப்பட்டவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கையில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் மூன்று லிட்டர் தண்ணீருடன் 8 நபர்கள் படகோட்டிகளினால் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

    மேலும் பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (21) மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இவ்வாறு மீட்கப்பட்டவ்கள் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

    Leave A Comment