• Login / Register
  • செய்திகள்

    குவைத்தில் கோர விபத்து; இந்தியர்கள் ஐவர் உள்ளிட்ட 7 பேர் பலி - நால்வர் படுகாயம்!

    குவைத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இந்தியர்கள் ஐவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

    ஜாபர் அல் அலி பகுதிக்கு எதிரே உள்ள 7-வது ரிங் ரோட்டில் மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த அநர்த்தம் ஏற்பட்டுள்ளது.

    குறித்த கார் விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 தொழிலாளர்களும் மற்றும் பங்களாதேசை சேர்ந்த 2 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கிருஷ்ணசாமி மற்றும் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் சிங், தேவிந்தர் சிங், பக்கர் சிங், பிஹாரி லால் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களை ஏற்றிச் மினி வேன், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது என தெரியவந்துள்ளது.

    இதைனையடுத்து, பாதுகாப்புப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் பொது தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட அவசரகால பதிலளிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    சம்ப இடத்திற்கு வந்த, அவர்கள் ஏழு பேர் இறந்ததை உறுதிசெய்து, உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    அத்துடன் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment