சி.அன்புமணிக்கு திடீர் நெஞ்சுவலி; பாமக வேட்பாளர் வைத்தியசாலையில் அனுமதி!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு லேசான நெஞ்சுவலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை நேற்று (08) மாலை 6 மணியோடு நிறைவடைந்துள்ளது.
நாளை (10) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சி.அன்புமணிக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave A Comment