• Login / Register
  • செய்திகள்

    நிலாவெளி கடல் அலையில் சிக்கிய இளைஞர் குழு!

    திருகோணமலை - நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர் குழு ஒன்று கடல் அலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

    அலையில் சிக்கிய நிலையில் இவ்வாறு 06 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    திருகோணமலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து குறித்த குழுவினரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நேற்று (06) பிற்பகல் குறித்த குழுவினர் கடலில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

    பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே அலையில் சிக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

    Leave A Comment