• Login / Register
  • செய்திகள்

    விக்கிரவாண்டியில் இன்று சீமான் பரப்புரை!

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் அபிநயாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (07) மாலை பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

    நாம் தமிழிர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில்குமாரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் 2024 இல் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மருத்துவர் அபிநயாவுக்கு ஆதரவாக துண்டறிக்கை பரப்புரை மற்றும் பொதுக் கூட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு விக்கிரவாண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் துவங்கி திருமலைச்சாமி திருமண மண்டபம் வரை இடம்பெறும் துண்டறிக்கை பரப்புரையில் சீமான் பங்கேற்பதாகவும், 

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு விக்கிரவாண்டி - பணையபுரம் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், மாற்றத்தை விரும்பும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் அபிநயா நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி மக்களை தொகுதியில் போட்டியிட்டு 65,381 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment