• Login / Register
  • செய்திகள்

    ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி!

    ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) வெற்றிபெற்றுள்ளார்.

    கடந்த மே மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேர்கள் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜூன் 28ம் திகதி நடந்த முதல் சுற்று வாக்கு பதிவில் வெறும் 40 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

    இதனால் வேட்பாளர்கள் எவரும் பெரும்பான்மையை பெற முடியாது போயிருந்தது.

    இதையடுத்து இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூலை 05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

    இதன்போது சீர்திருத்தவாதியும் முன்னாள் இதய அறுவை சிகிச்சை நிபுணருமான (Massoud Pezeshkian) என்பவர் 53 சதவிகத்திற்கு அதிக வாக்குகளை பெற்று ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

    இவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிர வலதுசாரி கொள்கைகொண்ட (Saeed Jalili) என்பவர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

    மருத்துவர் Pezeshkian-க்கு ஆதரவாக 53.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதை அடுத்து அவர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

    Saeed Jalili என்பவருக்கு ஆதரவாக 44.3 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

    தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தெஹ்ரான் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் டாக்டர் பெஜேஷ்கியானுக்கு ஆதரவாக மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலும் இளைஞர்களே வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரானின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள மசூத் பெசெஷ்கியன் ஈரான் முன்னெடுத்துவரும் கடும்போக்கு கொள்கைகள் அனைத்திற்கும் எதிரானவர்.

    அதுமட்டுமின்றி மக்களிடையே ஐக்கியம் மற்றும் ஒற்றுமையை உருவாக்க அவர் உறுதி அளித்திருந்ததுடன் மேற்கத்திய நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment