பிரித்தானிய புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி!
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தொழிலாளர் கட்சி (labour party) பெரு வெற்றி பெற்றுள்ளதை அடுத்து புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவி ஏற்க உள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி (conservative party) படுதோல்வியடைந்துள்ளது.
650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நேற்று (ஜூலை-04) விறுவிறுப்பாக நடைபெற்றிருந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 2024 பிரித்தானிய பொதுத் தேர்தலில் (british parliament election 2024) அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார்.
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரிட்டனின் தோள்களில் இருந்த பெருஞ்சுமை இறுதியாக அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள தொழில்கட்சியின் தலைவரும் புதிய பிரதமருமான கெய்ர் ஸ்டார்மெர் மாற்றம் தற்போது ஆரம்பமாகின்றது என தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்த நிலைவயில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment