உலக யோகா தினநாள் செங்கல்வராய நாயக்கர் கலை, அறிவியல் கல்லூரியில் முன்னெடுப்பு!
உலக யோகா தினநாளை முன்னிட்டு வள்ளல் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் கலை, அறிவியல் கல்லூரியில் யோகக் கலை குறித்து செயல்முறை விளக்க பயிற்சி இடம்பெற்றுள்ளது.

சென்னை, சூளையில் அமைந்துள்ள வள்ளல் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், ஈஷா யோகா மையத்துடன் இணைந்து நேற்று (21.06.2024) கல்லூரி கலையரங்கில் உலக யோகா தினநாள் கொண்டாடப்பட்டது.

இதில் ஈஷா யோகா மையத்திலிருந்து சரவணகுமார், ருச்சிதா ஆகியோர் பங்கேற்று, யோகக் கலை குறித்து செயல்முறை விளக்கத்துடன் (காணொளி மூலம்) மாணவர்களுக்கு பயிற்சி அளிந்தனர்.
முன்னதாக யோகா கலை குறித்து சரவணகுமார் அவர்களின் கருத்துரை இடம்பெற்றிருந்தது.
இதனப்போது கருத்துரையாற்றியபோது,
"உலக யோகா தினம் என்பது 2014 ஆம் ஆண்டு ஐநா மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலகம் முழுவதும் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த யோகக்கலை என்பது தமிழர்களுக்குரிய கலையாகும்.

யோகக் கலையைத் தோற்றுவித்தவர் சிவபெருமான் ஆவார். யோகக் கலை என்பது உள்ளத்தை தூய்மையாகவும் வலிமையாக வைத்திருக்கப் பயன்படுகிறது.
இதன்மூலம் மாணவர்கள் தங்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நலமாக உள்ள ஒருவரால் மட்டுமே எதையும் திறம்பட செய்து வெற்றி பெற முடியும். ஆகையால் மாணவர்கள் தங்களின் உடலையும் உள்ளத்தையும் நலமுடன் காத்து கற்று சிறந்து விளங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி முதல்வர் (பொ.) முனைவர் த. இளந்தமிழன் அவர்கள் புத்தகத்தைப் பரிசளித்தார். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் அ. அமுல்ராஜ் ஒருங்கிணைப்பு செய்து நடத்தினார்.
Leave A Comment