• Login / Register
  • செய்திகள்

    தரமற்ற மருந்து; இருவருக்கு பார்வை இழப்பு, மேலும் பலர் பாதிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!

    தரமற்ற கண் திரவத்தினை, கண் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சையின் பின்னர் பயன்படுத்தியமையினால் இருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் (Sri Lanka) வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடி (Economic Crisis) ஏற்பட்டதன் பின்னணியில் மருத்துவத்துறை பாரிய நெருக்கடியினை சந்தித்திருந்தது.

    இந்த சந்தரப்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகள் மூலம் மருத்துவமனை உயிரிழப்புகள் தற்போதுவரை தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், கண் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சையின் பின்னர் தரமற்ற கண் திரவம் பயன்படுத்தப்பட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    கண் நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் 'பிரெட்னிசோலோன்' (Pridnisolone) கண் திரவத்தின் 21510 குப்பிகள் தரம் குறைந்ததாக காணப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.

    இந்தக் கண் திரவத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தேசிய கண் வைத்தியசாலையின் (Colombo National Hospital) இரு நோயாளிகள் முழுமையாக பார்வையற்றவர்களாகவும், நுவரெலியா  பொது வைத்தியசாலையின் (Nuwara Eliya General Hospital) சுமார் பதினைந்து நோயாளிகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

    இந்த பாரதூரமான எதிர்விளைவுகள் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும், அங்கவீனமுற்ற நோயாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

    எனவே தற்போதைய சுகாதார அமைச்சரும், செயலாளரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Leave A Comment