சதையைத் தின்னும் வைரஸினால் துண்டிக்கப்பட்ட கை; ஆஸியில் உயிருக்கு போராடும் இலங்கை பெண்!
சதையை தின்னும் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் ஒரு கை அகற்றப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் (Australia) உயிருக்கு பேராடி வருவதான தகவல் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் (Sri Lanka) பெண் ஒருவரே கொடிய பற்றீரியா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.
வலி தாங்க முடியாதவாறு கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையிக்,
74 வயதான கார்மெல் ரொத்ரிகு தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
மெல்பேர்னில் (Melbourne) வசித்த அவர்களுடன் சில மாதங்கள் தங்கியிருந்த நிலையில் அவர் திடீரென்று இப்படி நோய்வாய்ப்பட்டார்.
கார்மெலின் இடது கை வீங்கி நீல நிறமாக மாறியிருந்த நிலையில், அவளுடைய மகள் தன் தாயை முதலில் குடும்ப வைத்தியரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும், நிலைமை தீவிரமனதால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு குடும்ப வைத்தியர் அறிவுறுத்தியிருந்தார்.
அவரது உயிரைக் காப்பாற்ற, வலியை ஏற்படுத்திய இடது கையை துண்டிக்க வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது இடது கை துண்டிக்கப்பட்ட பிறகு, வைத்திய பரிசோதனையில் அவருக்கு அரிதான பற்றீரியா தொற்று இருப்பது தெரியவந்தது.
இது தோலுக்கு அடியில் உள்ள செல்கள், சிறிய இரத்த நாளங்கள், கொழுப்பு ஆகியவை அழிந்து, தோல் மற்றும் சதையை கரைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் பற்றீரியா என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
நுளம்புகள் மற்றும் விலங்குகளால் பரவும் இந்த பற்றீரியா நிலை புருலி அல்சர் (Buruli ulcer) என்று அழைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய வைத்தியர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, அந்நாட்டின் பல மாநிலங்களில் இந்த தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட கார்மெல் உயிருக்கு போராடி வரும் நிலையில், மெல்போர்னில் உள்ள சன்ஷைன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் கடந்த மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஏனெனில் அவர் சுயநினைவுடன் இருந்தால் அவருடைய வலியை "தாங்க முடியாமல்இருக்கும்" என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்மெல் ரொத்ரிகுவின் சிகிச்சைக்கு 200,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, எனவே அதற்காக நிதியம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Leave A Comment