• Login / Register
  • செய்திகள்

    விஜய் பங்கேற்கும் முதல் நிகழச்சி; உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!

    நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதலாவது பொது நிகழ்வில் பங்கேற்க உள்ள அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு, விஜய் இன்னும் பொது நிகழ்வு எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

    முன்னர் அறிவித்ததை போன்று ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை நிறைவு செய்யும் வகையில் குறித்த திரைப்பட காட்சிகளில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.

    இதனால், அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியானபோது அது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய்.

    இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

    ஜூன் 28ஆம் தேதி கோவை, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்.

    அதற்குப் பிறகு ஜூலை மூன்றாம் தேதி மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்க உள்ளார்.

    அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்து வறுமையில் வாடும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குகிறார். இதன்மூலம் சுமார் 1500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு நடைபெற்ற ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், நடிகர் விஜய் ஆற்றிய உரையில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய பெற்றோர்களிடம் பணம் வாங்காமல் உங்களுடைய தலைவரை தேர்வு செய்ய கூறுங்கள் எனவும் பேசியிருந்தார்.

    குறித்த பேச்சு அரசியல் வட்டாரங்ளில் கவனிப்பை பெற்றிருந்தது.

    அதன் பின்னர் தற்போது குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய் என்ன பேசுவார் என அவரது கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசியல் தொடர்பில் விஜயின் என்ன பேசப்போகின்றார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது கட்சி தொண்டர்களும் அரசியல் அவதானிகளும் காத்திருக்கின்றனர்.

    Leave A Comment