பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு; 4 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!
சில நாட்களுக்கு முன்னர் காணமல் போயிருந்த பெண் ஒருவர் மலைப்பாம்பு ஒன்றினாள் விழுங்கப்பட்ட நிலையில் அதன் வயிற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இந்தோனேசியாவின் (Indonesia) தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான பரிதா (வயது-45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இந்தோனேசியா - காலேம்பாங் கிராமத்தில் 45 வயதான பரிதா என்ற பெண் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
நேற்று பரிதாவின் உடைமைகளை கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில், தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் பெரிய வயிற்றுடன் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் மீட்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியாவில் மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், 2017 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் மலைப்பாம்பு விழுங்கிய ஐந்தாவது நபர் இவராகும் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment