• Login / Register
  • செய்திகள்

    அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை; அடுத்த மாநில தலைவர் யார்?

    பாஜக-வின் தமிழ்நாடு மாநில தலைவராக பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் செயற்பட்டு வரும் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி சார்பில் 10 இடங்களில் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் அண்ணாமலை செயற்பட்டிருந்தார்.

    தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது.

    குறித்த தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்பதாக உட்கட்சிக்குள் மோதல் வலுவடைந்துள்ளதன் உச்சமாக மாநில தலைமை மாற்றப்பட வேண்டும் என்பதாக உச்சம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்க வரும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அண்ணாமலைக்கு அழைப்பு வந்துள்ளது.

    பிரதமர் மோடியுடன் இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    இதையடுத்து பாஜக-வின் தமிழ்நாடு மாநில தலைவர் பதவி அவரிடம் இருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பாஜக கட்சி கொள்கையின்படி ஒரு நபர் இருவேறு பொறுப்புகளில் இருக்க முடியாது என்பதால், அண்ணாமலை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழக பாஜக தலைமை மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளத.

    அது குறித்தான அறிவிப்பு அடுத்து வாரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் ஜெ.பி.நட்டா அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    Leave A Comment