• Login / Register
  • செய்திகள்

    மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தமிழக பெண்ணுக்கு அழைப்பு - சிறப்பு கௌரவத்திற்கு காரணம் என்ன?

    பெரும் இழுபறிக்கு மத்தியில் நாளை 18 ஆவது மக்களவையின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்iயில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சியை மேற்கொள்ள வேண்டிய அரசியல் நெருக்கடி பாரதிய ஜனதா தலைமைக்கு ஏற்பட்டிருந்தது.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரது ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நெருக்கடிக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது.

    குறித்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமின்றி குடிமக்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரயில் ஓட்டுநராக பணிபுரியும் ஐஸ்வர்யா மேனன் என்பவருக்கு, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா மேனன் 2 லட்சம் மணி நேரம் ரயில் ஓட்டுநராக பணியாற்றி உள்ளார்.

    குறிப்பாக, வந்தே பாரத், ஜன் சதாப்தி ரயில்களில் லோகோ பைலட்டாக பணியாற்றி உள்ளார். ரயில்வே சிக்னலை உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் அதிகம் பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டவர்கள், நாடாளுமன்றம் கட்டிய தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment