• Login / Register
  • செய்திகள்

    3வது முறை பிரதமராக மோடி; பதவியேற்பு தொடர்பில் NDA அறிவிப்பு!

    18ஆவது இந்திய மக்களவையின் பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance) அறிவித்துள்ளது.

    நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டிருந்தது.

    கடந்த இரண்டு ஆட்சி காலத்தின் போது தனித்து ஆட்சி அமைத்த பாஜக இம்முறை கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

    நடப்பு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் கிங் மேக்கர்களாக உருவாகியிருந்த நிலையில் அவர்களது கட்சியினருக்கு முக்கிய அமைச்சு பதவிகள் பகிரப்பட உள்ளது.

    பாதுகாப்புத்துறை, நிதித்துறை, உள்துறை, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து துறைகளை பாஜக தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேபோல் விமான போக்குவரத்து துறை மற்றும் எஃகு ஆகிய துறைகளை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    3 முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளது. ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

    இதன் மூலம், தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோடி சமன் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment