• Login / Register
  • செய்திகள்

    மிரட்டும் வெப்ப அலை; கோடை விடுமுறை நீடிப்பு - பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வெப்ப அலைவீசி வரும்நிலையில் கோடை விடுமுறை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதான அறிவிப்பு வெளியாகி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோடை விடுமுறையுடன் இந்திய மக்களவை தேர்தல் குறித்தான விடுமுறையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் ஜூன் மாதம் 6-ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

    மேலும், மக்களவைத் தேர்தல் முன்னிட்டு இந்தாண்டு கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.

    வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

    ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

    இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜுன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது.

    கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

    புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    தமிழ்நாட்டிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    Leave A Comment