• Login / Register
  • செய்திகள்

    ஈரானிய ஜனாதிபதி உயிரிழப்பு; இஸ்ரேல் சதி? உக்கிர பதிலடி நிச்சயம் - ஈரானின் எச்சரிகச்கையால் பதற்றம்!

    உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி மாயமாகியிருந்த ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு இஸ்ரேலின் சதி முயற்சி காரணமாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உக்கிர பதிலடி நிச்சயம் உண்டு என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் பயணித்த ஹெலிகொப்டர் நேற்று விபத்திற்குள்ளாகியுள்ளகியிருந்தது.

    கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள்  சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், குறித்த விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த உலங்கு வானூர்தி முற்றாக எரிவடைந்து அழிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

    அதில் பயணித்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட 9 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடலங்களும் இன்று (20) காலை அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் பதில் ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    அதேவேளை ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் இஸ்ரேல் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி கொடுப்போம் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment