சுமந்திரன் சொன்னது அப்பட்டமான பொய் - சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுப்பு!
நடைபெற உள்ள அரசு தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை கோட்கவில்லை, அவர் கூறியது வெறும் அப்பட்டமான பொய், அது அவரது அதீதமான கற்பனையின் வெளிப்பாடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்ழ்
கோப்பாயில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் இவ் வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- இன்றைய (நேற்று) ஊடகங்களில் ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது, சுமந்திரன் அவர்களிடம் ஜனாதிபதி தமிழ் மொது வேட்ப்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது; அவர் கூறியிருக்கின்றார்:- உத்தியோகபூர்வமாக யாரும் தன்னிடம் கேட்க்கவில்லை. இருந்த போதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னைச் சந்தித்து நீங்கள் நிர்ப்பீர்களா என்று என்னிடம் கேட்டதாகவும் தான் அதை மறுத்ததாகவும் ஒரு செய்திச் சொல்லியிருக்கின்றார்.
அது ஒரு உண்மையான விடயம் அல்ல. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பொது வேட்ப்பாளர் தொடர்பாக கருத்தை அவரிடம் கேட்டிருந்தேன் என்பது உண்மை. பொது வேட்ப்பாளரது தேவையைப் பற்றி நான் கூறியிருந்தது மாத்திரமல்ல அவரது கருத்தையும் நான் கேட்டருந்தேன் என்பது உண்மை!
அந்த வேளையில் யார் வேட்பாளர் என்பது பற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. அவ்வாறான வேளையில் நான் அவரைப் போய் பொது வேட்ப்பாளராக நில்லுங்கள் என்று நான் கேட்டதாக அவர் கூறியது ஒரு அதீதமான கற்பனையின் வெளிப்பாடோ என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால் அவ்வாறான ஒரு விடயத்தை நான் அவரிடம் கேட்க்கவில்லை என்பதை முதலாவதாக நான் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் பொது வேட்ப்பாளர் தேவை என்பதில், ஈ.பி.ஆர்.எல்.எப் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.
ஆகவே நான் சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரனிடம் நீங்கள் நில்லுங்கள் என்று கேட்டதாக் கூறுவது இந்தப் பேச்சுக்களை, கலந்துரையாடல்களை குழப்புவதற்கான முயற்சியாக் கூட இருக்குமோ என்று நான் சிந்திக்கின்றேன்.
இவ்வளவு ஒரு குறுகிய நோக்கங்களை, சிந்தனைகளைக் கொண்டவராக இருக்கக் கூடாது என்பதும் எனது வேண்டுகோளாக இருக்கிறது. ஆகவே நடக்காத அல்லது பேசப்படாத விடத்தை அவர் பேசியது என்பது சொல்லவது ஏற்புடைய விடயம் அல்ல. என்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் தமிழ் பொது வேட்பாளர் என்பது சுமந்திரனை விட பக்குவமான விசயங்களைக் கையாளக் கூடிய பல பேர் என்னைப் பொறுத்தளவில் கட்சிகளிலும் இருக்கின்றார்கள், அரசியல்க் கட்சிகளுக்கும் வெளியேயும் இருக்கின்றார்கள்.
எம்மைப் பெறுத்த வரையில் ஆரம்பத்தில் இருந்து ஒரு பொது வேட்ப்பாளர் என்பவர் கட்சி சாராதவராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் பார்த்தால்க் கூட அவ்வாறான ஒரு கோரிக்கையை சுமந்திரனிடம் நான் வைக்கத் தேவையில்லை. ஆகவே அவ் விடயத்தில் அவர் ஒரு தவறான, பிழையான கருத்தைக் கூறியிருக்கிறார் என்பதை நான் வெட்டை வெளியில் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.
Leave A Comment