• Login / Register
  • செய்திகள்

    பேரறிவாளன் தீர்ப்பு எஞ்சிய 6 பேருக்கும் பொருந்தும் : நீதிபதி கே.டி.தாமஸ்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்ற அமர்வு 1999ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் ஒரு நீதிபதியாக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்த கே.டி.தாமஸ்.

    பின்னாளில் இவர் பேரறிவாளனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். தண்டனைக்காலம் முடிந்ததும் பேரறிவாளனை விடுவித்திருக்க வேண்டும் என்றார். ஒரு குற்றவாளிக்கு இரண்டு முறை தண்டனை வழங்க முடியாது என்று இவர் கூறிவந்தார். இந்த கருத்தை  வாதமாக வைத்தே வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, வாதாடி பேரறிவாளனை மரண தண்டனையில் இருந்து மீட்டார்.
    உச்சநீதிமன்றம் 142ஆவது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்ததை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று
    கே.டி.தாமஸ் கருத்துத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், ‘பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எஞ்சிய 6 பேருக்கும் பொருந்தும்’ என்று கூறியுள்ளார்.

    ‘ஒரே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெவ்வேறு தீர்ப்பை வழங்க முடியாது’ என்றும் கே.டி.தாமஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

    Leave A Comment