• Login / Register
  • செய்திகள்

    பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 3 சீனர்கள் உள்பட 4 பேர் பலி

    பாகிஸ்தானின் வணிகத்தலைநகரமாக கருதப்படும் இடம் கராச்சி.

     

    இங்கே கராச்சி பல்கலைக்கழகமும், அதன் உள்ளே  கன்பியூசியஸ் என்ற கல்வி நிறுவனமும் இருக்கிறது. கன்பியூசியஸ் கல்விநிறுவனத்தில் சீனமொழி கற்றுத்தரப்படுவது வழக்கம்.

     

    இந்தநிலையில் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு வேனில் சிலர் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது வேனில்  திடீரென குண்டு வெடித்து வேன் சிதறியது. அதில் 4 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தார்கள். பலியான 4 பேர்களில் 3 பேர் சீனாவைச் சேர்ந்த, சீன மொழி கற்றுத்தரும் ஆசிரியர்கள். குண்டுவெடிப்பு நடந்தபோது வேனில் 8 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

     

    வேன் குண்டுவெடிப்பை அடுத்து அந்தப்பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப்பகுதியில் வேறு ஏதாவது குண்டு இருக்கிறதா என தேடிக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

     

    கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த குண்டுத்தாக்குதல், ரிமோட் கண்ட்ரோல் எனப்படும் தொலைதடக் கட்டுப்பாடு மூலம் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் உருது மொழி நாளிதழான ஜங் தெரிவித்துள்ளது.

    …………….

    Leave A Comment