இரவில் யோகாசனம் செய்யலாமா..?
உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.
யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இரவில் யோகாசனம் செய்யலாமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும் .
உறக்கம் சரியான அளவில் இல்லாத நிலையில், அது நமது மனதளவில் அதீத பாதிப்பினை ஏற்படுத்தி, கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நிலைக்கு நம்மை இட்டுச்சென்று விடுகின்றன. நமது உடல் மனதளவில், செயல்பாட்டு அளவிலும், இயல்பு நிலையில் இருக்க நல்ல ஊட்டச்சத்து உணவுகள் மட்டுமல்லாது, நல்ல உறக்கமும் மிகவும் முக்கியமானது ஆகும்.
உறங்க செல்வதற்கு முன், நமது கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். உறக்கத்தில் குறைபாடு ஏற்படும்பட்சத்தில், அது நமது மனநிலையை கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக, நீங்கள் எப்போதும் சோர்வாகவே காணப்படுவீர்கள். இரவில் நல்ல உறக்கம் மேற்கொள்பவர்கள், மறுநாள் நல்ல புத்துணர்ச்சியுடன் வேலைகளை பார்க்க ஆரம்பிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உறங்க செல்வதற்கு முன்னரே, குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் கால அளவில், நமது உறக்கத்திற்கு ஏற்ற சூழலை நாம் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். மனதிற்கு இதமான வாசனை திரவியங்களை பயன்படுத்துதல், இனிய இசையை கேட்பதனால், இந்த சூழலை உருவாக்க முடியும். சிறந்த உறக்கத்தால், நமது மனம் லேசாகிறது. மன அழுத்தம் குறைகிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
சிறந்த உறக்கத்தை பெற, கீழ்க்காணும் நிலைகளில் துவக்க காலத்தில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடங்கள் வரையிலும், பின்னர், நன்கு பழகிய பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்துவர வேண்டும்.
சுகாஷனா

கால்களை மடக்கிவைத்து உட்கார வேண்டும் உள்ளங்கைகள் மற்றும் முழங்கால்களை மேல்நோக்கியவாறு வைத்து பிராப்தி முத்ரா நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உட்காரும் போது, முதுகு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
வஜ்ராசனா

இந்த ஆசனம், வயிற்றுப்பகுதியின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுவதால், இந்த ஆசனத்தை,உணவை சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளுதல் நலம். முழங்கால்கள் தரையை தொடுமாறு இருக்க வேண்டும்
முட்டிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைத்துக்கொண்டு அமர வேண்டும். இரண்டு பாதங்களின் மேற்பகுதியில் நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.
உள்ளங்கைகள் மற்றும் முட்டிகளை மேல்நோக்கியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். முதுகுப்பகுதியை, நேராக வைத்துக்கொண்டு, உட்கார வேண்டும்.
அத்வாசனா – தலைகீழ் சடலம் போஸ்

சிறந்த உடலமைப்பை பெற
வயிற்றுப்பகுதியை தரை தொடும்படி வைக்க வேண்டும்.
உள்ளங்கைகள் கரையை நோக்கியவாறு இருத்தல் வேண்டும்
முன்னந்தலையும் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
தியானம்
இந்த முறை மேற்கொள்ள அமைதியான இடத்தை முதலில் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுகாஷனா போன்ற ஆசன நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்
நேர்கொண்ட பார்வையாக 5 வினாடிகள், திரும்பிய நிலையில், 5 வினாடிகள், இடது மற்றும் வலது பார்வையாக தலா 5 வினாடிகள் என முகத்தை திருப்ப வேண்டும்.
பின் கண்களை மூடி, பார்த்த விஷயங்களை,நம் கண்களின் மூலம், மனதில் நிலைநிறுத்த வேண்டும்.
இந்த தியான நடைமுறை, உங்கள் மனதை அமைதியாக இருக்க உதவுகிறது. இதன்மூலம், சிறந்த உறக்கம் நமக்கு கிடைக்கிறது. இந்த ஷிதி தியான முறை உடன், பிரம்மாரி தியான்,ஆரம்ப தியான் உள்ளிட்டவைகளையும் நாம் மேற்கொண்டால் சிறந்த பலன்களை பெற முடியும்.
Leave A Comment