ரூ.2,000 நோட்டு: அமேசானின் அதிரடி அறிவிப்பு
செப்டம்பர் 19ஆம் தேதி முதல், கேஷ் ஆன் டெலிவரியின்போது 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
கடந்த மே 19ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கையிலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் வைப்பாக செலுத்தவோ அல்லது சில்லறையாக மாற்றவோ முடியும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அமேசான் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது.
Leave A Comment