மதுரையில் 50 சதவீத மானிய விலையில் விதைகள் விற்பனை ...!
மதுரையில் 50 சதவீத மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.
மதுரை - கல்லுப்பட்டி பேரையூர் வேளாண் விரிவாக்க மையங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட இயக்கங்களின் கீழ் 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, உளுந்து, பாசிப்பயறு, சுராஜ் ரக பருத்தி விதைகள் இருப்பில் உள்ளது. சிறுதானியத்தில் செயல் விளக்க திடல் அமைப்பதற்கு விதை நுண்ணூட்ட உரம்இ உயிர் உரங்களும், விதை கிராமத் திட்டத்தில் 34,449 ரக நெல் மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை, பருத்தி, தானியங்களை 50 கிலோ வீதம், பயறு வகை பயிர்களை 2 கிலோ வீதம், 10 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். நுண்ணூட்ட உரங்களை விதைத்த பின் மேலூரமாக இடும்போது தான் பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்கும். திரவ உயிர், உரம் உயிர், பூஞ்சான கொல்லி மருந்துகளையும் மானிய விலையில் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Leave A Comment